கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Thursday, September 28, 2006

கந்தர் அனுபூதி - 3

அனுபூதியின் முதற் பாடல்


ஆடும் பரி வேல் அணி சேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானை சகோதரனே


இப்பாடலை கயமாமுகனைச் செருவில் சாடும் தனி யானை சகோதரனே, ஆடும் பரி வேல் அணி சேவல் என பாடும் பணியே பணியா அருள் வாய் என்று கொள்ளலாம்.


இறைவனைப் பாடும் வேதங்கள், பாசுரங்கள், பதிகங்கள் எல்லாவற்றிர்கும் ஆதாரமாக விளங்குவது ஓம் என்னும் பிரணவமேயாகும். ஓம் என்னும் சப்தமே பிரபஞ்சத்தின் ஆதியில் இருந்தது எனக் கூறுவார். அதைப் பிரித்தால் 'அ' காரமாகவும் 'உ' காரமாகவும் 'ம' காரமாகவும் பிரியும். அ உ ம் சேர்ந்ததே ஓம் ஆகும். அருணகிரியார் இந்தப் பிரணவத்திலிருந்தே தனது அனுபூதியைத் தொடங்குகிறார். 'ஆடும்' என்ற சொல்லின் மூலம் அ கார, உ கார ம காரங்களைக் கையாண்டு முருகப் பெருமானின் வாகனமான மயிலைப் குறிப்பிடுகிறார். அதுவும் எப்படி, ஆடும் மயில் என்று சொன்னால், அச் சொற்கள் சேர்ந்து ஆடு மயில் என்றாகிவிடும். எனவே மயிலைக் குறிக்கும் இன்னோரு சொல்லான பரியைப் பயன் படுத்தி 'ம' காரம் மறைந்து போகாமல் பாடுகிறார்.


ஆக, மயிலையும், சேவலையும், சக்தி வேலையும் பாடும் பணி மட்டும் போதும் என இறைவனை வணங்கும் அவர், முருகப் பெருமானை கயமுகாசுரனை செருவில் வென்ற ஆனைமுகன் சகோதரனே என்று வழிபடுகிறார். விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கிய அவர் இந்தப் பாடலிலும் அவரைக் குறிப்பிடுகிறார். கயமுகனை விநாயகர் வென்று ஆட்கொண்டார். மூஞ்சூரு வடிவில் தனது பாத கமலங்களில் அவனை வைத்துள்ளார். ஆகவே தமது மோசமான குணங்களை விட்டு இறைவனை வழிபட்டால் அவன் நம்மை ஆட் கொள்வான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

2 Comments:

Blogger G.Ragavan said...

நல்லதொரு விளக்கம். கந்தரநுபூதி தீந்தமிழ் இறைநூல். இகபர சுகம் தாண்டி அநுபூதி நிலை தரும் செய்யுட்றொடர்.

இதற்கு எனக்குத் தெரிந்த வகையில் நானும் பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கீழுள்ள சுட்டியில் காணவும்.

http://iniyathu.blogspot.com

11:26 PM

 
Blogger பராசரன் said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன்

9:23 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home